ஈரான் நிலவரம் குறித்து 28 நாடுகளின் அமைச்சர்கள் ஆலோசனை
ஈரான் படைத்தளபதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற சூழல் குறித்து விவாதிக்க அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரசல்ஸ் நகரில் ஆலோசனை நடத்தினர்.
2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்தது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. யூரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கப் போவதாக ஈரான் அறிவித்திருப்பதால் ஏற்பட்டுள்ள அணு ஆயுத போர் அச்சுறுத்தல் சூழல் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரானின் அத்துமீறல்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பதற்ற நிலையைத் தணிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஜீன் வைஸ் டிரயன் தெரிவித்துள்ளார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments