நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் - வரும் 22ம் தேதி தூக்கு

0 815

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து சாலையோரம் தூக்கி வீசிவிட்டுச் சென்றனர். அந்த 6 பேரில் சம்பவம் நடைபெறும்போது சிறுவனாக இருந்த ஒருவன் 3 ஆண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டான்.

அதே போன்று ராம் சிங் என்ற குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் விரைவு கோர்ட் தூக்கு தண்டனை விதித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்திருந்தது.

இந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments