102 ஆண்டுகளில் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம்

0 1066

பியூரிட்டோ ரிக்கோவில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஆளுநர் வாண்டா வாஸ்குவெஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட மிக சிறிய மற்றும் சிறிய பூகம்பங்கள் பியூரிட்டோ ரிக்கோ பிராந்தியத்தை உலுக்கியுள்ளன. இந்நிலையில் கடைசி 2 நாட்களாக அடுத்தடுத்து நில நடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு சொந்தமான கரீபியன் தீவான பியூர்ட்டோ ரிக்கோ குலுங்கியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.

அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. 73 வயதான முதியவர் ஒருவர் மீது சுவர் இடிந்துவிழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெற்கு கடற்கரையோரத்தில் உள்ள பள்ளிகள், வீடுகள் மற்றும் தேவாலயங்கள் இடிந்து விழுந்தன. பிரபலமான சுற்றுலா மையம் ஒன்று கடலில் சரிந்தது.

மின்கம்பங்கள், மின்நிலையங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவசர சேவைகள் தவிர அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு அவசரகால தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments