வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த மருதாணியே போதும்..! அசத்திய கல்லூரி மாணவிகள்

0 5162

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளம்பர பதாகைகள் எதற்கு? மருதாணியே போதும் என கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர்..

தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருடைய வாக்கின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை கொண்டுச் சேர்ப்பதின் ஓர் அங்கமாகத் தான் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையொட்டி சென்னை ராணிமேரி கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கிடையே மருதாணி வரையும் போட்டி நடைபெற்றது.

நுற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு சிறு குழுக்களாக பங்கேற்று தங்களது கைகளில் மருதாணியைக் கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை தீட்டி அசத்தினர்.

ஆளும் அரசை தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்களே, வாக்குக்கு பணம் கொடுப்பதும் தவறு பெறுவதும் தவறு , இளம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மாணவிகள் தங்களது கைகளில் போட்டிப்போட்டு வரைந்தனர் .

image

மருதாணி வரையும் போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதை பார்வையிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ , இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று பரிசளிக்கப்படும் என்றார் மேலும் முழு வாக்குப்பதிவை எட்டும் நோக்கிலேயே இளம் வாக்காளர்களிடையே கல்லூரிகளில் இதுபோன்ற போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே, நமக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது. 18 வயது நிறைந்த வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் தங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை எதிர்பாராமல், தங்களின் வாக்குரிமை எனும் கருவியைப் பயன்படுத்தி இந்தியாவை மாபெரும் ஜனநாயக நாடாகக் கட்டமைத்திட உறதியேற்க வேண்டும் என்பதையே இம்மாணவிகள் மருதாணியைக் கொண்டு உணர்த்துகின்றனர் .

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments