டிக்டாக் தில்லாலங்கடி கொலை..! காதல் முறிவால் விபரீதம்

0 2103

டிக்டாக்கில் ஜோடியாக ஆடிப்பாடி காதலித்த அழகுக்கலை மாணவி ஒருவர், தனது காதலை முறித்துக் கொண்டதால் விரக்தி அடைந்த காதலன், மாணவியைக் கொலை செய்துவிட்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காரகோணம் பகுதியை சேர்ந்த ஆசிரியையின் 19 வயது மகள் ஆஷிகா. அழகுக் கலை மாணவியான ஆசிகா எப்போதும் டிக்டாக்கில் ஏதாவது பாடலுக்கு ஆடிப்பாடி பொழுதைக் கழித்துள்ளார்.

அப்போது ஆஷிகாவுக்கு, அனு என்ற இளைஞருடன் டிக்டாக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து டிக்டாக் செய்வது தொடங்கி ஒன்றாக வெளியில் செல்வது வரை நெருக்கமாகி காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலன் ஒல்லியாக பல்லிபோல இருந்ததால் ஆஷிகாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதலனுடன் டிக்டாக்கில் ஜோடியாக ஆட்டம் போட்ட ஆஷிகா, அவனை கழற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. அவனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துவிட்ட நிலையில், அனு அடிக்கடி ஆஷிகாவுக்கு நேரடியாக மிரட்டல் விழுத்துள்ளான்.

காவல் நிலையத்தில் ஆஷிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனுவை அழைத்து இனி பிரச்சனை செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தன்று மதியம், கையில் கத்தி ஒன்றை மறைத்து எடுத்துக் கொண்டு அவன் ஆஷிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளான்.

ஆசிகாவின் தாய் தந்தை இருவரும் வெளியில் சென்றிருந்த நேரம் வீட்டில் இருந்த பாட்டியை மீறி கத்தியுடன் உள்ளே புகுந்த அனு, ஆஷிகாவின் கழுத்தை அறுத்து துண்டாக்கி கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் காதலை முறித்துக் கொண்ட தில்லாலங்கடி காதலியை கொலை செய்து விட்டு இளைஞர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிக்டாக் நாட்டுக்கு...வீட்டுக்கு.. உயிருக்கு கேடு என்று பலமுறை தலைப்பாடாக அடித்துக் கொண்டலும் நடிப்புத்திறமையை காட்டுவதாக நினைத்து டிக்டாக்கிற்கு அடிமையாகி காதலில் விழுந்து எழமுடியாமல், காதலனை கழற்றி விட்டு பிரிந்தால் என்ன மாதிரி விபரீதங்கள் எல்லாம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments