நீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்
நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அமெரிக்க மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் தமிழர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வருகை தர இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை சேர்ந்த 123 அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருப்பதாக கூறினார்.
Comments