நெல்லை கண்ணன் கைதில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை - முதலமைச்சர்

0 816

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்,பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியது யாராலும் ஏற்று கொள்ள முடியாது என்றார்.

எந்த கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய முதலமைச்சர், அவரவர் வீட்டு வாசலில் கோலம் போட்டால் பிரச்சனை இல்லை என்றும் அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டதால், வீட்டு உரிமையாளர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments