தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகள் 60 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

0 1020

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில், 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத், தமிழகத்தில் தொழில் துவங்கியுள்ள சியட், ஃபாஸ்கான், போன்ற நிறுவனங்களில் அரசின் மானியத்துடன் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments