15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ தின்று தீர்க்கும் பெண்.. செலவை கேட்டால் தலை சுற்றும்

0 1342

இங்கிலாந்து நாட்டில் 44 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர்.

லிசா ஆண்டர்சன் என்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டின் டெவோனைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். முகத்திற்கு பூசும் பவுடரை தின்பதற்கு அடிமையான லிசா ஆண்டர்சன், அதற்காக இதுவரை எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளார் தெரியுமா?

மயங்கி விடாதீர்கள். 15 வருடங்களாக சுமார் 8,000 பவுண்டு தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய். இந்த பழக்கம் துவங்கியதிலிருந்தது யாருக்கும் தெரியாமல் குளியலறைக்கு சென்று ரகசியமாகவே டால்கம் பவுடரை சாப்பிட்டு வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் லிசா குடும்பத்தினருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனால் போதைக்கு அடிமையானது போல பவுடருக்கு அடிமையான அவரை, அதிலிருந்து மீட்க தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் குடும்பத்தினர்.

5 குழந்தைகளுக்கு தாயான லிசா அரை மணிநேரத்திற்கு ஒருமுறை டால்கம் பவுடரை சாப்பிடும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இரவு தூங்கும் போது கூட, பவுடரை சாப்பிடுவதற்காகவே அடிக்கடி விழிப்பதாக கூறியுள்ளார்.

மருத்துவர்களின் உதவியை நாடிய போது உணவில்லாத பொருட்கள் மீதான, ஈர்ப்பு தொடர்பான நோய் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

டால்கம் பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசித்தாலோ, தின்றாலோ உடம்பிற்கு கெடுதல். புற்று நோய் கூட வர வாய்ப்புண்டு. ஆனால் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments