முத்தூட் பைனான்சின் இயக்குநர் தாக்கப்பட்டார்

0 1477

பிரபல தங்க நகை அடமான நிறுவனமான முத்தூட் பைனான்சின் நிர்வாக இயக்குநர் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொச்சியை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வருவாய் இழப்பின் காரணமாக கேரளத்தில் 43 கிளைகளை மூட முடிவு செய்துள்ளது. இதனால் 163 பேருக்கு வேலை போகும் என கூறி பணியாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ. வினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில்  கொச்சியில், தலைமை அலுவலகத்திற்கு காரில் சென்ற நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலக்சாண்டர் முத்தூட் கல்வீசி தாக்கப்பட்டார்.

இதில் தலை மற்றும் தோள் பகுதியில் காயம் அடைந்த அவருக்கு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  முத்தூட் பிரச்சனைக்கு தீர்வு காணும் மாநில அரசின் முயற்சிக்கு அதன் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ள கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன், முத்தூட் நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை கையாளுவதாகவும் கூறி இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments