அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுக்கு பெண்டகன் மறுப்பு
ஈரான் நாட்டிலுள்ள கலாச்சார மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பை, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் மறுத்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய தளபதி குவாஸிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த எண்ணினால் அந்நாட்டின் 52 கலாச்சார மையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
அவரதுக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், அமெரிக்க படைகளின் தாக்குதல் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஈரானின் கலாச்சாரத்தை மதிப்பதாகவும், சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, கலாச்சார மையங்கள், குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments