Facebook பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த விரைவில் வருகிறது New Updates

0 1092

பயனர்களின் கணக்கை மேம்படுத்தும் விதமாக Facebook நிறுவனம் புதிய பிரைவசி அம்சங்களை அப்டேட் செய்ய உள்ளது. Facebook நிறுவனம் இந்த வாரம் உலகளவில் Privacy அப்டேட்ஸ்களை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook தனது Privacy Checkup tool-ஐ புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தவும் முடியும்.

Facebook-ல் கடந்த 2014ம் ஆண்டு முதல் Privacy Checkup tool பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் , 4 புதிய அம்சங்கள் Privacy Checkup tool-ல் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.

Who Can See What You Share:

பயனர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் போஸ்ட்கள் உள்ளிட்ட தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய இந்த அம்சம் உதவும்.

How to Keep Your Account Secure:

வலுவான password-ஐ பயன்படுத்தி log in தொடர்பான எச்சரிக்கைகளை இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதுகாப்பை வலுப்படுத்த இந்த அம்சம் உதவும்.

How People Can Find You:

Facebook-ல் மக்கள் உங்கள் பார்க்கும் வழிகளை மதிப்பாய்வு செய்ய பேஸ்புக் உங்களை இந்த அம்சம் அனுமதிக்கும். மேலும் உங்களுக்கு யார் Friend Request கொடுக்கலாம் என்பதையும் இந்த அம்சத்தின் மூலம் மதிப்பாய்வு செய்யலாம்.

Your Data Settings on Facebook:

நீங்கள் Facebook-ஐ பயன்படுத்தி உள்நுழைந்த apps-களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

புதிய அம்சங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Facebook நிறுவனம் "தனியுரிமை தனிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும், எனவே சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவ, நாங்கள் தனியுரிமை உதவிக்குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம் என கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments