வங்கி மோசடிகளில் தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடம்

0 958

வங்கி மோசடிகளில், தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடத்தில் இருப்பதாக சி.பி.ஐ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு பதிவான 11 பெரிய வங்கி மோசடிகளில் ஐதராபாத்தில் 7 ம், சென்னை மற்றும் பெங்களூருவில் தலா 2 ம் நடந்துள்ளன. ஐதராபாத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டும் 4ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.ராயப்பட்டி சாம்பசிவராவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனமான டிரான்ஸ்டோரி இந்தியா லிமிட்டட் சுமார் 3 ஆயிரத்து 822 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதி வகட்டி நாராயண ரெட்டிக்கு சொந்தமான வி.என்.ஆர். இன்ஃப்ரா நிறுவனம் 62 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடி செய்தது குறித்து கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments