வாக்காளர் சிறப்பு முகாமில் 9 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்யபிரதா சாகு

0 905

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக இதுவரை ஒன்பது லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 25ம் தேதி வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை ராணிமேரி கல்லூரியில் மாணவிகளுக்கு இடையேயான மெஹந்தி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதாசாகு, வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர் பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments