ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தினர் கால்நடைத்துறை அமைச்சருடன் சந்திப்பு
சென்னையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சந்தித்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தினர், கால்நடை இனப்பெருக்க சட்டம் 2019ல் பிரிவு 12ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தின் படி, இனவிருத்திக்காக பயன்படும் காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாத பட்சத்தில் தண்டனை வழங்கவும் இப்பிரிவு வகை செய்கிறது. மேலும் பதிவு செய்த காளைகள் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு, இனவிருத்திக்கு தகுதியானதா என ஆராய்ந்து மருத்துவச்சான்றிதழ் வழங்கப்படும். அதில் தகுதி பெறாத மாடுகள், மருத்துவக்குழுவின் வழிகாட்டுதலின்படி அழிக்கப்பட வேண்டும் எனவும் பிரிவு 12ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments