நளினியை விடுதலை செய்யக் கோரிய மனு - மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுதலை செய்யக் கோரிய மனுவை கடந்த 2018-ஆம் ஆண்டு நிராகரித்ததாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்திருந்த மனுவில், 2018-ஆம் ஆண்டு ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், நளினியை விடுவிக்க கோரிய மனுவை 2018 ஏப்ரலில் மத்திய அரசு நிராகரித்து விட்டதாகத் தெரிவித்து, அதன் உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Comments