டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார்.. பாக். அமைச்சர் செயலால் பரபரப்பு

0 964

டிக் டாக் பெண் பிரபலத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை, பாகிஸ்தான் அமைச்சர் பவாத் செளதரி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஹரீம் ஷா என்ற இளம்பெண், டிக் டாக்கில் அடிக்கட்டு வீடியோ வெளியிட்டு அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக திகழ்கிறார். அவருடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் செளதரியை தொடர்புபடுத்தி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாசிர் லூக்மேன் என்பவர் பேசியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் செளதரி, பஞ்சாப் மாகாண அமைச்சர் ஒருவரின் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த முபாசிரை கன்னத்தில் அறைந்தார். தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக அவரை அறைந்ததாக செளதரி ஒப்புக் கொள்ளவும் செய்துள்ளார்.

சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள செளதரி, அமைச்சர் பதவி என்பது இன்று வரும் நாளை போகும். ஆனால் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதலை என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்றார்.

யாராவது தவறான குற்றச்சாட்டுகளை கூறும்போது கண்டிப்பாக எதிர்வினையாற்றுவேன் என குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments