உ.பி. வன்முறைகளுக்கு பிரியங்கா காந்தி நிதி உதவி - பாஜக குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தில் வன்முறையைத் தூண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நிதி உதவி செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் சுவாதந்திர தேவ் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
பெய்ரேலியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் அமைதி நிலவியதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களை இறக்குமதி செய்து, பிரியங்கா காந்தி அதை குலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இது போன்ற நடவடிக்கைகளை பிரியங்கா காந்தி மேற்கொள்ளுவாரா என்று அவர் சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை (திருத்த) சட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர்கள் நேரு அல்லது மன்மோகன் சிங் ஆகியோரால் இந்த வேலையைச் செய்ய முடியவில்லை. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் தலைவர் இந்த புரட்சிகர முடிவை எடுத்து CAA இருப்பதை உறுதி செய்துள்ளார் என மோடியை பாராட்டி பேசினார்.
Comments