அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை ஊர் மக்களே அமைக்க கோரி முறையீடு

0 1199

அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு விழாக் குழுவை ஊர் பொது மக்களே சேர்ந்து தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது சார்பில் இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் ஜல்லிகட்டுப் போட்டிகளை நடத்த, ஒவ்வோர் ஆண்டும் விழாக்குழு அமைக்கப்படும்.

இதில் ஒருவரே தொடர்ந்து தலைவர் பொறுப்பினை வகித்து வருவதாகவும் செயலர், பொருளாளர் போன்ற பொறுப்புகளை மட்டும் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி ஊர் பொதுமக்களே இணைந்து விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என முறையிடப்பட்டது. அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments