ஹுண்டாய் நிறுவனமும், உபேரும் இணைந்து பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த திட்டம்

0 1021

ஹுண்டாய் நிறுவனமும், உபேரும் இணைந்து பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

நாசாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கீழிருந்து நேராக மேலே உயரும் வகையிலான மின்கார்களை இதற்காக ஹுண்டாய் நிறுவனம் வடிவமைக்கும். 1000 அடி முதல் 2000 அடி உயரத்தில்    மணிக்கு 290 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் இது பறக்கும்.

ஒரு முறை மின்னூட்டம் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லது. 4 பேர் அமரும் வகையில் இருக்கை வசதியும், பயணப் பெட்டிகளை வைக்கும் வசதியும் இருக்கும். முழுதும் மின்சக்தியால் இந்த வாகனம் இயக்கப்படும். முதலில் ஓட்டுநர் உதவியுடனும் பின்னர் தானாக பறக்கும் வகையிலும் இவற்றை உருவாக்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. பறக்கும் டாக்சிக்கான சேவை மற்றும் செயல்முறைகளை ஊபர் மேற்கொள்ளும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments