உணவில் விஷத்தை கலந்து வீரர்களை கொலை செய்ய பயங்கரவாதிகள் சதி
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களை உணவு மற்றும் குடிநீரில் விஷத்தை கலந்து கொலை செய்ய பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல், சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்புப் படை வீரர்களை, அவர்கள் சாப்பிடும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் விஷத்தை கலந்து கொல்ல பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments