பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் வழக்குகளின் மீதான விசாரணை தொடங்கியது
பாலியல் வல்லுறவு வழக்குகளில் சிக்கி உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீதான 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.
2006 ல் அவர் தம்மை பலாத்காரம் செய்ததாக திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி (Mimi Haleyi) என்பவரும், 2013 ஆம் ஆண்டு தம்மை பலாத்காரம் செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) பல்வேறு கால கட்டங்களில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மீ டூ வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) எதிராக அங்கு குழுமி இருந்த நடிகைகள் உள்ளிட்டோர் கண்டனக் குரல் எழுப்பினர். குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Comments