தர்பார் ரிலீஸ்: ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவ ரஜினி ரசிகருக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

0 942

தர்பார் பட ரிலீஸ் நாளன்று சேலத்தில் அப்படத்தை திரையிடவுள்ள திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவ காவல்துறை அனுமதியளிக்க மறுத்துள்ளது.

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், நாளை மறுதினம் வெளியாகவுள்ள நிலையில, பாரப்பட்டியைச் சேர்ந்த ரஜினி ரசிகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கனகராஜ், ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் மீது காலை 9 மணி முதல் 11 மணிக்குள் ஹெலிகாப்டரில் மலர் தூவ வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதிகோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரின் விண்ணப்பம் மாநகர காவல்துறை, விமான போக்குவரத்து ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த காவல்துறை, ஹெலிகாப்டரை வேடிக்கை பார்க்க ரசிகர்கள் திரளும்போது, போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிவித்து, அனுமதிக்க வழங்க மறுத்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments