கரும்புக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தையை சுட்டுக் கொன்ற பொதுமக்கள்

0 639

உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 14 வயது சிறுவன் உள்பட 6 பேரை கொன்ற சிறுத்தையை கிராமவாசிகள் சுட்டுக்கொன்றனர்.

பிஜ்னோர் அருகே போக்பூர் என்ற இடத்தில் பள்ளிக்கு அருகாமையில் கரும்புக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, நேற்று பிரசாந்த் குமார் என்ற 7 ஆம் வகுப்பு சிறுவன் மீது பாய்ந்து கடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த செய்தி சுற்றுவட்டார கிராமத்தில் பரவியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், கரும்புக்காட்டை சுற்றிவளைத்து அங்கு பதுங்கியிருந்த சிறுத்தையை சுட்டுக் கொன்று சடலத்தை வீதிகளில் இழுத்துச் சென்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments