குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து 52 லட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது -அமித் ஷா
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது என பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக, இலவச டோல் பிரீ தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு, மிஸ்டு கால் செய்யுமாறு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 52 லட்சத்து 72 ஆயிரம் பேர் மிஸ்டு கால் செய்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.
Comments