சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சித் தலைவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், நாடாளுமன்றத்தில் கைகலப்பு
வெனிசுலாவில் சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சித் தலைவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், நாடாளுமன்றத்தில் கைகலப்பு ஏற்பட்டது.
அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு நடந்த தேர்தலில் ஜூவான் கைடோ என்பவர் வெற்றி பெற்றார். நாடாளுமன்றம் செல்ல முயன்ற அவரை காவல்துறையினர் தடுத்துநிறுத்தியதால், எதிர்கட்சியினருக்கும் காவல் துறைக்கும் நடுவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜூவானுக்குப் பதிலாக, நாடாளுமன்ற சபாநாயகராக லூயிஸ் பர்ரா என்பவரை நியமித்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உத்தரவிட்டார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் இருதரப்பினரும் நாடாளுமன்ற அவைக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments