பொருளாதார விவகாரங்கள் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் பல்வேறு சக்திகள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அரசின் பொருளாதார விவாகரங்கள் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் பல சக்திகள் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சிஏஐடி எனப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பில் பேசிய அவர், தற்போது காணப்படும் பொருளாதார சுணக்கம் உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதி எனக்கூறினார்.
இந்தியாவை விட வளர்ந்த நாடுகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று பேசிய அவர், பொருளாதார விவகாரங்கள் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் பல சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால், வர்த்தகர்களின் நலன்களை புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
தலைநகர் டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத வணிக சொத்துக்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களைப் பாதுகாக்க பொது மன்னிப்புத் திட்டம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு CAIT கடிதம் எழுதியிருந்தது.
இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், அங்கீகரிக்கப்படாத வணிக சொத்துக்களை சீல் வைப்பது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிட்டார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments