மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்புக்குத் தடையில்லை -உயர்நீதிமன்றம்
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பிற்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பான திமுகவின் முறையீட்டை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவியேற்பை தடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றார். மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, தேர்தல் வழக்காக, சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்குத் தொடரலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், பாமக பெற்ற இடங்களை இணையதளத்தில் வெளியிட, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, பாமக சார்பில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரிக்கப்படும் என நீதிபதி ஆதிகேசவலு கூறியுள்ளார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments