ஹாங்காங்கிற்கு ரூ.1,038 கோடி கறுப்புப்பணம்..!

0 1098

ஹாங்காங்கிற்கு ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் அனுப்பியதாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் 51 நிறுவனங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஹாங்காங்கிற்கு ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்புப் பணம் அனுப்பியதாக 51 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுத் துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முகமது இப்ராஹிம்சா ஜானி, ஜிந்தா மிதார், நிஜாமுதீன் ஆகிய மூவரும், 48 நிறுவனங்களும் கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 51 நடப்புக் கணக்குகளைத் தொடங்கியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் 24 கணக்குகளில் இருந்து ஹாங்காங்கிற்கு 488 கோடியே 39 லட்சம் ரூபாய் கருப்புப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வங்கி அதிகாரிகள் துணையுடன் இந்தப் பரிவர்த்தனை 2014 - 2015ம் ஆண்டில் நடந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

இதுதவிர, 27 கணக்குகளில் இருந்து ஹாங்காங்கிற்கு 549 கோடியே 95 லட்சம் ரூபாய் கருப்புப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பணம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் செலவுக்காக அனுப்பப்படுவதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பான முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் அனுப்பிய தொகைக்கு ஏற்ப கமிஷன் பெற்றுள்ளதாகக் கூறிய அந்த சிபிஐ அதிகாரி, முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையைச் சேர்ந்தவை என்றும் முறைகேடுகள் தொடர்பாக 3 தனிநபர்கள் மற்றும் 48 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments