பழங்களின் விலை கணிசமாக குறைவு
சென்னையில் பழங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
கோயம்பேட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருகிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான இமாச்சல் ஆப்பிள் இப்போது 100 ரூபாய்க்கும், 80 ருபாய்க்கு விற்பனையான ஆரஞ்ச் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, 100 ரூபாய்க்கு விற்பனையான ஒருகிலோ சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனையான கொய்யாப்பழம் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோன்று, மாதுளை, திராட்சை போன்ற பழங்களின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளன என்றும் இந்த விலை குறைவானது பனிகாலம் முழுவதும் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments