சுபஸ்ரீ தந்தை 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

0 1421

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில், அவரது தந்தை 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டது தொடர்பாக, 4 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது , சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாயும், அரசியல் கட்சிகள் சார்பில் 7 லட்ச ரூபாயும் வழங்கபட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

1 கோடி ரூபாய் இழப்பீட்டிற்கான விண்ணப்பமும் பரிசீலினையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து 4 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments