5 லட்சம் கோடி டாலர்களை கடந்து இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம்

0 1098

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்பது முதல் கட்டம் தான் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதையும் தாண்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மோட்டார் பம்புகள் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் கிர்லோஷ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தொழில்துறையினருக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்ற கொள்கை உறுதிப்பாடுக்கு ஏற்ப, பெருநிறுவனங்களுக்கான வரி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

எந்த காரணத்திற்காகவும் தொழில் துறையினர் அதிருப்தி அடைய தேவையில்லை என்று கூறிய பிரதமர், புதிய சக்தியுடன் முன்னேறிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், இந்திய அரசு தோளாடு தோள் கொடுத்து துணைக்கு வரும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு முதல் கட்டம் தான் என்றும், தங்களது இலக்குகள் அதையும் தாண்டி பெரியது மற்றும் உயர்ந்தது என்று அவர் கூறினார்.

வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே தனிநபர்கள் குறுக்கீடு இருப்பதை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த புத்தாண்டு முதல் இனிவரும் 10 ஆண்டுகள் இந்திய தொழில்முனைவோருக்கு உரியதாக இருக்கும் என்று சொல்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். 

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments