சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் 13 ஆம் தேதி முதல் விசாரணை

0 797

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த உத்தரவிட்டதற்கு எதிரான சீராய்வு மனுக்களை, வரும் 13 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி வரும் 13 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற இருக்கிறது. அதேபோன்று மசூதிகள் மற்றும் பார்சி கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments