காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு உணர்த்துவது என்ன ?
அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது.
மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் .
காலநிலை மாற்றத்தின் மூலம் இந்த பூமி சந்திக்க கூடிய நிகழ்வுகளை அடிக்கடி செய்திகள் மூலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.காடழிப்பு, நகரமயமாதல், மழையின்மை போன்ற காரணிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மனித குலம் தயாராக வேண்டும் என்பதே இயற்கை ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளே காலநிலை மாற்றத்திற்கு உதாரணம்.
ஆஸ்திரேலியா காட்டு தீ
எங்கு காணும் தீம்பிழம்புகளை கக்கிய வானம், வாழ்விடத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கும் விலங்குகள், தப்பித்தோம்,பிழைத்தோம் என்ற பீதியில் மக்கள் இது தான் ஆஸ்திரேலியாவின் இன்றைய நிலை.
ஆம் கடந்த மூன்று மாதங்களாக இடைவிடாமல் எரிந்து வரும் காட்டுத்தீயால் அரிய உயிரினங்களை இழந்து வருகிறோம்.அங்கு அதிகம் வாழும் கோலாக்கரடிகளும் கங்காருக்களும் தண்ணீருக்காவும்,உணவுக்காகவும் மிகவும் பரிதாப நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார்கள்.
காட்டுத்தீயை அணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் எந்த வித உபயோகம் இல்லாமல் தீ ஆனது கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டே இருக்கிறது.
அவசர நிலை பிரகடனப்படுத்தியும் மக்களை வெளியேற்றியும் வருகின்றனர்.இதுவரை 1500 வீடுகள் சேதம் ஆகியுள்ளது 23 பேரின் உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த இரு நாட்களாக மழை பெய்து அங்கு நிலவும் தீயை தணித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் கடுங்குளிர்
டெல்லியில் கிட்டத்தட்ட 119 ஆண்டுகளுக்கு பிறகு பகல் நேர குளிராக மிக குறைந்த அளவு 2.2 டிகிரி செல்ஷியஸ் காணப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
அதிக உச்சத்தை தொட்ட டெல்லி கடுங்குளிர் மனித உயிர்களையும் பழி வாங்கியது.குளிருக்காக ரெட் அலர்ட் கொடுத்தது இதுவே முதன்முறை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது.
மனித இனம் பூமியிடம் போரில் ஈடுபட்டுள்ளது.இப்போது பூமி மனிதனிடம் போர் செய்கிறது.இது காலநிலையின் அவசர பிரகடனம்
Comments