சென்னையில் கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம்

0 910

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கடந்த ஓராண்டில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும்,  பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தது, அபராதம் விதித்தனர்.

இதனிடையே, கடந்த ஓராண்டில், 312 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments