இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

0 1515

திருவள்ளூர் அருகே இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் அக்குழுமத்தின் தலைவரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ-வுமான வி.ஜி.ராஜேந்திரன், கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்போடியா நாட்டின் மூத்த அமைச்சர் ஜெனரல் கேம்சீட் மற்றும் அவரது மனைவிக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு உறியடித்து மகிழ்ந்தனர். கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments