தேனி மாவட்டத்தில் நாட்டுரக வாழைக்காய் விலை உயர்வு
சபரிமலை சீசன் காரணமாக தேனி மாவட்டத்தில் நாட்டுரக வாழைக்காய்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கேரளாவில் வாழைக்காய் சிப்ஸ்களை அதிக அளவில் வாங்குகிறார்கள். நடப்பு ஆண்டில் பக்தர்களின் வருகையும் சிப்ஸ் விற்பனையும் மிக அதிகமாக உள்ளதால் வாழைக்காய்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள சிப்ஸ் வியாபாரிகள், தேனி மாவட்டத்தில் இருந்து வாழைக்காய்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.
சிப்ஸ் தயாரிக்க உகந்த நாட்டுரக வாழைக்காய்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்பு கிலோ 12 ரூபாய்க்கு விற்பனையான நாட்டு வாழைக்காய் இப்போது 26 ரூபாய்க்கு விற்பனையாவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.ஆனால் கேரளாவில் ஒரு கிலோ சிப்ஸ் 300 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
Comments