ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் 16-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17- ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட கோட்டாட்சியர் முருகானந் தம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன், மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தையும், வாடிவாசல், வீரர்கள் காளைகள் பதிவு செய்து பரிசோதனை செய்யப்படும் இடத்தையும், அதிகாரிகள் பார்வையிட்டனர். பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர், ஜல்லிக்கட்டு விழா 2 ஊரிலும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என்றார்.
Comments