மாணவர்களிடம் 2ம் பருவத்திற்காக வழங்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பெற்று பராமரிக்க அறிவுறுத்தல்

0 818

அரையாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில், 6 முதல் 8ம் வகுப்புவரை 2ம் பருவத்திற்காக வழங்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று பராமரிக்குமாறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

6 முதல் 8ம் வகுப்புவரை 2-ஆம் பருவத்திற்காக வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களில், பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள புத்தகங்களை, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மாணவர்களிடம் இருந்து பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.

அவற்றை புத்தக வங்கியில் பாட வாரியாக தொகுத்து, பாதுகாத்து வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை அழியாமல் பாதுகாக்கும் வகையில், பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

 

Watch More ON : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments