ஜப்பானில் இருந்து கார்லோஸ் லெபனானுக்கு தப்பியது எப்படி?
நிதி மோசடி வழக்கில் சிக்கி ஜப்பானில் சிறை வைக்கப்பட்ட நிஸான் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன், அங்கிருந்து தப்பியது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடும் நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் இருந்த அவர் லெபனானுக்கு தப்பிச் சென்றார். கடந்த 29 ஆம் தேதி டோக்கியோவில் இருந்து புல்லட் ரயில் மூலம் அவர் ஒசாகா சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அன்றைய தினமே தனியார் ஜெட் விமானத்தின் சரக்குப் பெட்டியில் ஒளிந்து இஸ்தான்புல்லுக்கு சென்று விட்டதாக ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல்லில் இருந்து வேறு விமானத்தில் அவர் பெய்ரூட்டை அடைந்த தாகவும் அது கூறியுள்ளது. கார்லோஸ் தப்ப உதவியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜப்பான் நீதித்துறை அமைச்சர் மசாகோ மோரி ((Masako Mori)) தெரிவித்துள்ளார்
Comments