ஒருவருட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்.! அமெரிக்காவில் சுவாரசியம்
பொதுவாக இரட்டை குழந்தைகள் சில நிமிட இடைவெளியில் பிறப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வருட இடைவெளியில், Dawn Gilliam என்ற பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததுள்ளார்.
என்ன ஒரு வருடமா என திகைப்பு வேண்டாம்.. ஆம்.. சமீபத்தில் பிறந்த புத்தாண்டு காரணமாக இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. st.vincent carmel என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் Dawn Gilliam. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறி இருந்ததால், உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட Dawn Gilliam-விற்கு, கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 11.37க்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சரியாக அரை மணி நேரம் கழித்து அதாவது 2020-ம் ஆண்டு துவக்கமான, ஜனவரி 1-ம் தேதி 12.07 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு Joslyn என்றும், அடுத்த வருடம் பிறந்த இரட்டையர்களில் ஒருவரான ஆண் குழந்தைக்கு Jaxon என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அரை மணி நேர இடைவெளியில் பிறந்திருந்தாலும், Joslyn மற்றும் Jaxon ஒரே நாளில், பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போயுள்ளது. இந்த இரட்டையர்கள் வெவ்வேறு தேதிகள் மற்றும் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்தநாளை கொண்டாடுவர் என்பது, நிச்சயம் அவர்களது பெற்றோருக்கு சுவாரசியமான நிகழ்வாக இனி இருக்கும்.
Comments