9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
15 நகராட்சி மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட 27 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்துள்ளது.
Comments