நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது நீதிமன்றம்

0 1086

நடிகையை கடத்தி சிலர் பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகையை கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே சிலர் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதற்காக அவர்களை தூண்டியதாக திலீப் மீது ஆலுவா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறி சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப்,  ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்  விசாரணை வரும் 28 ஆம் தேதி துவங்கும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments