டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் ஐசிசியின் முடிவுக்கு அக்தர் எதிர்ப்பு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களுக்குள் நடத்தும் முறைக்கு, பிசிசிஐ தலைவர் கங்குலி ஒப்புதல் அளிக்கமாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5 நாட்கள் நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை, 4 நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுவரும் நிலையில், முன்னணி வீரர்கள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்தர், உலக கிரிக்கெட்டில் செல்வாக்குமிக்க அமைப்பாக திகழும், பிசிசிஐயின் ஒப்புதல் இல்லாமல் ஐசிசி இதை நடைமுறைக்கு கொண்டுவரமுடியாது என தெரிவித்தார். பிசிசிஐ தலைவர் கங்குலி புத்திசாலி என்பதால், ஐசிசியின் இந்த புதிய முறைக்கு அவர் ஒப்புதல் அளிக்கமாட்டார் எனவும் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
Comments