77வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா

0 971

பிரசித்தி பெற்ற கோல்டன் குளோப் திரை விருதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக 1917 தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கரில் நடித்த ஜோகுயின் ஃபோனிக்ஸ் (Joaquin Phoenix) தட்டிச் சென்றார்.

ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர் அமைப்பால் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதில் ஆஸ்காரை விடவும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. மிகவும் பெருமை வாய்ந்த இந்த விருது, 78 ஆவது முறையாக, அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

 சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் 1917 தேர்வானது.யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தின் இயக்குநர் சாம் மென்டிஸ் (Sam Mendes) சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.
ஜோக்கரில் நடித்த ஜோகுயின் ஃபோனிக்ஸ் (Joaquin Phoenix) சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.  விருதைப் பெற்ற அவர் பருவநிலை மாற்றம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

 சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெல்வேகருக்கு (Renée Zellweger) வழங்கப்பட்டது.
சோனி பிக்சர்ஸ் தயாரிப்பான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood) சிறந்த இசை மற்றும் நகைச்சுவைப் படமாக தேர்வாகி விருது பெற்றது.

அதே சமயம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜோக்கர் படத்திற்காக ஹில்டர் குனாடோட்டிருக்கு (Hildur Guðnadóttir) கிடைத்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, குணச்சித்திர பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான விருது செர்னோபில்லுக்கு(Chernobyl) வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments