பூலான் தேவிக்கு எதிரான வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
மத்தியப்பிரதேசத்தில் 20 பேரை சுட்டுக் கொன்றதாக பூலான் தேவி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பல் பள்ளதாக்கில் கொள்ளைக்காரியாக வலம் வந்து பின்னர் திருந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பூலான்தேவி. இவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பழி வாங்கும் பொருட்டு 1981 ஆம் ஆண்டு கான்பூர் அருகே பெஹ்மாய்(Behmai) என்ற இடத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 20 பேரை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
39 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொலை வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் கான்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் பூலான் தேவி உள்பட 16 பேர் உயிரிழந்துவிட்டனர். 3 பேர் ஜாமினில் வெளியிலும் ஒருவர் சிறையிலும் உள்ளனர். மேலும் 3 பேர் தலைமறைவாகிவிட்டனர்
Comments