சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

0 1178

ட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. 

சட்டப்பேரவை கூடியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கினார்.

ஆனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். அவர்களை ஆளுநர் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர் என்றும், ஆளுநர் உரை முடிந்த பிறகு உங்களது பேச்சுத் திறமையின் மூலம் கருத்துகளை எடுத்து வைக்கலாம் எனவும் ஆளுநர் கூறினார். அவர் உரையைத் தொடரவே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் இல்லை, புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை என குற்றம்சாட்டினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுநர் மதிப்பளிக்கவில்லை எனவும் அவர் புகார் கூறினார்.

திமுக தேய்பிறை என்ற அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு புள்ளிவிவரங்களுடன் பதிலளித்த மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி மன்றத்தில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது என்றார்.

 

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்: https://www.polimernews.com/dnews/95642

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments