பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டுவதில்லை- அமைச்சர் மறுப்பு

0 849

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, இல்லங்கள்தோறும் சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வீடியோ பதிவு மூலம், கண்டனம் தெரிவிக்கும் சோனியா காந்தி, போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை மட்டும் கண்டிக்கவில்லை என்றார். நாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை, பட்ஜெட்டுக்காக காத்திருக்காமல், உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றுவதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களில் மாதத்திற்கு ரூ .1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல் வரும் நாட்களில் "நல்லதாக" இருக்கும் என்றும் அவர் கூறினார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் பாகுபாடுகள் எதுவும் பார்க்கப்படுவதில்லை.

மேலும் மாநிலங்களின் நிலுவைத் தொகை மத்திய அரசால் திரும்பப் பெறப்படவில்லை.14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி நிதி தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments