பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கிடுக்கிப்பிடி
கம்பெனி பதிவின் கீழ் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டிலும் நிதியறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறார். நாட்டில், 11 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், இன்னும் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நிதி மோசடியில் ஈடுபட்ட பல நிறுவனங்கள், பதிவு செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, ஷெல் நிறுவனங்கள் எனப்படும் போலி நிறுவனங்களை கண்டறிந்து களையெடுத்து வருகிறது. இந்த வகையில், 2 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள், கம்பெனி பதிவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments