2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

0 1939

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது

ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார்

எனது உரையை தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கலாம்

பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை பயன்படுத்துங்கள் - ஆளுநர்

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

பொங்கல் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்

ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு செல்கிறது

நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு முதலமைச்சருக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு தடைகளை கடந்து தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ளது

சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது

தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிற்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்

மாமல்லபுரத்திற்கு சிறப்பு சுற்றுலா மேம்பாட்டு நிதி வழங்க மோடி உறுதி அளித்திருந்தார்

மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு சுமார் ரூ.7000 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்

ரூ.563.30 கோடி மதிப்பில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சனையை தீர்க்க கேரள முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசியது பாராட்டுக்கு உரியது

தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சரியான தருணத்தில் ஆந்திர முதலமைச்சர் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட்டதற்கு நன்றி

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் முகாம் மூலம் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன

9.77 லட்சம் மனுக்களில் சுமார் 5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மூலம் மக்கள் அரசு திட்டங்களை எளிதாக பெற வகை செய்யப்பட்டுள்ளன

தமிழ் மொழி மற்றும் தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது

நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டள்ளது

ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடப் பணிகள் மிக விரைவில் முடிவடையும்

மதுரை காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு கல்வி மையமாக உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்

முதல்கட்டமாக கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தபட்சம் 200டிஎம்சி தண்ணீரையாவது காவிரி வடிநிலத்திற்கு வழங்க வேண்டும்

காவிரி தெற்கு-வெள்ளாறு இணைப்பு திட்டம் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படும்

சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இந்த ஆண்டு பயிரிடும் பரப்பளவு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது

தமிழக உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

விவசாய காப்பீடு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழக விவசாயிகள் ரூ.7200 கோடி பெற்றுள்ளனர்

சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடி மதிப்பிலான கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனத்திற்கு விரைவில் அடிக்கல்

மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே ரூ.120 கோடி மற்றும் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டி முடிக்கப்பட உள்ளன

நாகை வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடி செவில் மீன்பிடித்துறைமுகம் அமைய உள்ளது

கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடிகிறது

பொங்கல் கொண்டாட ஏழை மக்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சருக்கு பாராட்டுகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் 

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு 63 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் சேவை வழங்க ரூ.1815 கோடி மதிப்பிலான பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

செயற்கை நுண்ணறிவு, நம்பிக்கை இணையம் (Blockchain), பொருட்களின் இணையம் (Internet of Things) தரவுப் பகுப்பாய்வு, (Data Analytics) போன்றவை மூலம் TNeGA சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

ரூ.2000 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் துவங்கப்பட உள்ளது

2019-2020 நிதி ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ12,500 கோடி கடன் வழங்க இலக்கு 

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ தொடங்கப்பட்ட காவலன் செயலி திட்டம் பெறும் வெற்றி பெற்றுள்ளது

நடப்பு ஆண்டு மூலம் தகுதியான 5 லட்சம் நபர்களுக்கு கூடுதலாக சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறுவதற்கான அசையா சொத்து மதிப்பு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது

ரூ.1 லட்சம் வரையிலான அசையா சொத்து கொண்டவர்கள் தற்போது ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தகுந்த பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 

தமிழக அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

தமிழக அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க கூடாது

பெண்ணையாற்று படுகையில், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது

தமிழக அரசின் ஒப்புதலின்றி, கர்நாடகம் பெண்ணையாற்றுப் படுகையில் நீர்தேக்கம் அமைக்க முடியாது

பெண்ணையாற்றுப் படுகையில் கட்டுமானப் பணியை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது

சமய வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படும்

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்திற்கும் 50% பங்கு மூலதனத் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் 15.5 கி.மீ. நீளத்திற்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும்

இதற்கான விரிவான சாத்தியக் கூறு மற்றும் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும்

சென்னை நகரின் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, தடையற்ற போக்குவரத்தை வழங்க புதிய திட்டம்

சென்னை மாநகர கூட்டாண்மை என்ற தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தேசம்

முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலை வழங்கப்படும்

9 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான பணிகள், ரூ.3267 கோடி செலவில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளன

அண்ணா பல்கலை.யை ஒப்புயர்வு கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது

ஒப்புயர்வு கல்வி நிறுவனம் ஆன பின்னரும், அண்ணா பல்கலை. தொடர்ந்து மாநில சட்டத்தில் இயங்கும்

அண்ணா பல்கலை.க்கு மாநில இடஒதுக்கீட்டு கொள்கை தொடர்ந்து பொருந்தும் என இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது

இதுகுறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்களை கொண்ட குழு - பரிந்துரைகள் அடிப்படையில் உரிய முடிவு

கல்லூரி இடைநிற்றல் மாணவர்களில் 1 லட்சம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் சிறப்பு முயற்சியாக 1 லட்சம் பேரை தேர்வு செய்து பயிற்சி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments